சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆஜராக உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:25

மதுரை : தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழியில்லாத கைதிகளுக்கு சட்ட உதவி வழங்க வழிகாட்டுதல் பிறப்பிப்பது தொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



செங்கோட்டை அருகே கற்குடி பதிபூரணம் 52. இவர் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததாக 1994 ல் செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். திருநெல்வேலி நீதிமன்றம் 1996 ல் ஆயுள் தண்டனை விதித்தது. பதிபூரணம்,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. என்னை வழக்கில் தவறாக சேர்த்துள்ளனர்.



கீழமை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜாமினில் அனுமதிக்க வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு விசாரித்தது.மனுதாரருக்காக சட்ட உதவி மையம் மூலம் ஆஜரான வழக்கறிஞர்:மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. சட்ட உதவி மையம் மூலம் இம்மனு 2018 ல் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.மேல்முறையீடு செய்ய முறையான சட்ட உதவி இல்லாததால் பல தண்டனை கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.



அவ்விபரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு சட்ட உதவி வழங்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்றார்.நீதிபதிகள்: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் செப்.,17 ல் காணொலியில் ஆஜராக வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X