14 சவரன் நகை திருடிக் கொண்டு 10 ரூபாய் வைத்து சென்ற திருடன் | செய்திகள் | Dinamalar
14 சவரன் நகை திருடிக் கொண்டு 10 ரூபாய் வைத்து சென்ற திருடன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:34

காரைக்கால் : டீ கடைக்காரர் வீட்டில் 14 சவரன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருடிய நபர், பெருந்தன்மையாக பீரோவில் 10 ரூபாயை வைத்துச் சென்றார்.



கோட்டுச்சேரி பாரதியார் சாலையை சேர்ந்தவர் இளந்தேவன் (49); அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். நிரவி பகுதியில் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் சென்று, இரவு வீடு திரும்பினார்.வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு, படுக்கை அறையில் வைத்திருந்த 14 சவரன் தங்க நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.



பீரோவில் இருந்த அனைத்து பொருட்களையும் அபேஸ் செய்த திருடன், பெருந்தன்மையாக, 10 ரூபாயை வைத்து விட்டு சென்றுள்ளார்.எஸ்.பி., ரகுநாயகம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கோட்டுச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகில்தான், போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X