வில்லியனுார் : வில்லியனுார் அருகே வாலிபரை தாக்கிய கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வில்லியனுார் அடுத்த உத்திரவாகினிபேட் பாரதி வீதியை சேர்ந்தவர் தமிழ்மணி,31; ஒதியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தார்.பணியின் போது காலில் அடிபட்டதால், அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் அக்கா மருமகன் ஸ்டீபனிடம், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் விஜி, கே.வி., நகரை சேர்ந்த முரளி, விஜயன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அதனை தமிழ்மணி தட்டிக் கேட்டார்.
ஆவேசமடைந்த விஜி உள்ளிட்ட மூவரும் தமிழ்மணியை தடி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த தமிழ்மணியை, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில், விஜி உள்ளிட்ட 6 பேர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.