இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2 வயது குழந்தை | செய்திகள் | Dinamalar
இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2 வயது குழந்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:59

புதுச்சேரி : அரியாங்குப்பத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தை கீர்த்தன்யா, தனது நினைவாற்றல் திறனால், இந்தியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.



புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ரகுவரன். இவரது மகள் கீர்த்தன்யா,2. இவர், மழலை மொழியில் திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றை கூறி அசத்துகிறார். புதிர்களுக்கு விடை காணுதல், விலங்கு மற்றும் பறவைகளின் ஒலிகளை நடித்துக் காட்டுதல், தேசிய சின்னங்கள், விலங்குகள், பறவைகள், வாகனங்கள், வண்ணங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெயர்களையும் கூறுகிறார்.



ஆங்கில எழுத்துக்கள், தமிழ் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் போன்ற 20 தலைப்புகளில் தனது திறமையை வெளிக்காட்டி, வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.குழந்தை கீர்த்தன்யாவின் அசாத்திய நினைவாற்றலை பாராட்டி, இந்தியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.விருது பெற்ற குழந்தை கீர்த்தன்யாவை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X