காரைக்காலில் வளர்ச்சிப் பணிகள்; லட்சுமி நாராயணன் ஆலோசனை | செய்திகள் | Dinamalar
காரைக்காலில் வளர்ச்சிப் பணிகள்; லட்சுமி நாராயணன் ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:59

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.



பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சிவா, நாகதியாகராஜன், கலெக்டர் அர்ஜுன் சர்மா, மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், பொதுப்பணித் துறை செயலர் விக்ராந்த்ராஜா, துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பொதுப்பணித் துறையில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 'காரைக்காலில் பொதுப்பணித்துறை முலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்தாண்டு ரூ.36 கோடி மதிப்பில் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X