காரைக்கால், : காரைக்காலில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநள்ளாறு, நெய்வாச்சேரி பெரியார் நகரில் இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. வெளியூரில் இருந்த சிலர் விநாயகர் சதுர்த்திக்காக சொந்த ஊர் திரும்பினர்.நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, பெரியார் நகர் வெங்கடேஷ்(24), வாசுதேவன்(25), உதயகதிரவன் (28) ஆகியோரை, திருநள்ளாறு அத்திப்படுகை சாலையை சேர்ந்த கார்த்தி(20), நந்தா(22), ராஜ்குமார்(24), ஐயப்பன்(28) ஆகியோர் வழிமறித்து, கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினர்.
காயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்கிய நபர்களை உடனே கைது செய்யக் கோரி உறவினர்கள் திருநள்ளார் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.மோதல் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர்.