ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல் | செய்திகள் | Dinamalar
ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:01

காரைக்கால் : இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட காரைக் கால் மீனவர்களை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.



கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த 11 மீனவர்களை, கடந்த 4ம் தேதி, இலங்கை மீனவர்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்களையும் பறித்துச் சென்றனர்.இதில் படுகாயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களை, நேற்று முன்தினம் அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.



பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:'நீட்' தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு, மத்திய அரசின் கொள்கை முடிவு. அதை நாங்கள் வரவேற்கிறோம்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். முக்கிய சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும். உள்ளாட்சி தேர்தலை பா.ஜ., வரவேற்கிறது.கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.



ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இனி அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவன செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X