நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை கிடையாது! தெளிவுபடுத்தியது சட்டத்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:04

புதுச்சேரி : ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தலில், நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை இல்லை என, சட்டத்துறையின் விளக்கம் தெளிவுபடுத்தி உள்ளது.



புதுச்சேரி மாநிலத்திற்கான ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம், வரும் அக்., 6ம் தேதியுடன் முடிவடைகிறது.அதனையொட்டி, இப்பதவிக்கான தேர்தல் வரும் அக்., 4ம் தேதி நடைபெறும் என, கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை செயலர் முனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.



இன்று மனு தாக்கல்தேர்தலுக்கான மனு தாக்கல், இன்று (15ம் தேதி) துவங்குகிறது. 22ம் தேதி வரை, தினசரி காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். வரும் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மனு தாக்கல் கிடையாது.இருவர் மட்டுமே அனுமதி அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரை, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் முன் மொழிய வேண்டும்.



பதிவு பெற்ற அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளராக இருப்பின், 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும்.மனு தாக்கலுக்கு வரும் வேட்பாளரின் வாகனத்துடன், கூடுதலாக ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.



தேர்தல் உண்டா?




மனுக்கள் மீதான பரிசீலனை, வரும் 23ம் தேதி நடைபெறு உள்ளது. 27ம் தேதி மாலை 3:00 மணிக்குள், மனுவை வாபஸ் பெறலாம். அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.அதில், ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக அன்றே அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.



போட்டி இருப்பின், வரும் 4ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை சட்டசபை வளாகத்தில், நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில், ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும். அன்று மாலை, அங்கேயே ஓட்டுகள் எண்ணி, முடிவு அறிவிக்கப்பட உள்ளது.



நியமன எம்.எல்.ஏ., விவகாரம்




நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ரங்கசாமி முதல்வராக உள்ளார்.மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏ.,க்களில் என்.ஆர்.காங்.,-10; பா.ஜ.,-6; சுயேச்சை -6; தி.மு.க., -6; காங்., - 2 பேர் உள்ளனர்.சுயேச்சை எம்.எல். ஏ.,க்களில் மூவர் நேரடியாக பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதுதவிர, பா.ஜ.வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.



நியமன எம்.எல்.ஏ.,க் கள் தொடர்பான வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், இவர்களுக்கும் உண்டு என கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால், ராஜ்யசபா தேர்தலில், நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை உண்டா என சர்ச்சை எழுந்தது.



சட்டத்துறை விளக்கம்




இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், சட்டத் துறையிடம் கருத்து கேட்டது. அதில், அரசியலமைப்பு பிரிவு 80 (4) (5)ன் கீழ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, ஷரத்து 27(4)ன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே, ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.



உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சட்டசபை வளாகத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆதலால், நியமன எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கும், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போடும் உரிமை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.



யாருக்கு வாய்ப்பு




எப்படி இருப்பினும், என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணியில் (மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் உட்பட) மொத்தம் 19 பேர் உள்ளனர். அதனால், இத்தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி ஆகியுள்ளது.இருப்பினும், இக்கூட்டணியில் எந்த கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார் என்பதில் தான் மர்மம் நீடித்து வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X