பட்டாக்கத்தியை சுழற்றி மிரட்டல் விடுத்தவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பட்டாக்கத்தியை சுழற்றி மிரட்டல் விடுத்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:22

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே பட்டாக் கத்தியை சுழற்றிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.



அரகண்டநல்லுார் அடுத்த வடகரை தாழனுாரைச் சேர்ந்தவர்கள் மோகன் மகன் கார்முகில், 20; தீர்த்தமலை மகன் அமுல்ராஜ், 20; முனுசாமி மகன் அய்யப்பன், 20; நண்பர்கள். மூவரும் நேற்று முன்தினம் அய்யனார் கோவில் அருகே பட்டாக் கத்தியுடன் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.



இதனை, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த், 24; அவரது நண்பர் ராஜேஷ் இருவரும் இதனை தட்டிக் கேட்டனர்.ஆத்திரமடைந்த கார்முகில், ஆனந்த்தை பட்டாக் கத்தியின் பின்புறத்தால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து கார்முகில், அய்யப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து, அமுல்ராைஜ தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X