ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூர்! விதிகளை கடைபிடிக்க வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:53

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், 6,097 பதவி இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று 15ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணி முழுவீச்சில் நடக்கிறது.



தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடந்தது. வார்டு வரையறை பணிகள் முடியாததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்கவில்லை.விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.



இதில், 28 ஆயிரத்து 293 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர் உட்பட மொத்தம் 6,097 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.முதல் கட்டமாக வரும் அக்டோபர் 6ம் தேதி செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய ஒன்றியங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக 9ம் தேதி காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், மேல்மலையனுார், வல்லம் ஆகிய ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.



இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் 2,948 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களாக 694 கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 13 ஒன்றியங்களுக்கும் தனித்தனியாக 13 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 420 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 96 ஆயிரத்து 115 பெண் வாக்காளர்கள், 158 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். 31 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 904 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.



வேட்பு மனுக்கள் அந்தந்த ஒன்றியங்களில் இன்று 15ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை அரசு வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படுகிறது. தேர்தலையொட்டி, காணை, முகையூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் நேற்று ஆய்வு செய்தார்.விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி, காணை, அரகண்டநல்லுார், முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை செய்தார்.



ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம், தடுப்புக் கட்டை வசதிகள், தடையில்லா மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து, பதற்றமான ஓட்டுச் சாவடிகளை பார்வையிட்டார்.



மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அனைவரும் விதிமுறைகளை கடைபிடித்து தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, ஆர்.டி.ஓ., அரிதாஸ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X