திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே 10 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, 15 நாட்களுக்கு முன் 4 பேர் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிறுமி அளித்த தகவலின்படி காட்டுப்பையூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்திபன், 25; வெங்கடேசன் மகன் பிரபா, 27; சுப்ரமணியன் மகன் கோபி, 26; அப்பாதுரை மகன் அருள், 24; ஆகிய 4 பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து நால்வரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் டி.எஸ்.பி., கங்காதரன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று, பார்த்திபனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரபா, கோபி, அருள் ஆகியோரை தேடி வருகின்றனர்.