ரூ.2.63 கோடி மோசடி வழக்கு; பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரூ.2.63 கோடி மோசடி வழக்கு; பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
05:58

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரூ.2.63 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.



விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நாவற்குளத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 49; பாதிராபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர், மற்றும் கோலியனுாரைச் சேர்ந்த கவுசல்யா, 40; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த், 43; ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் ஈட்டலாம் எனக்கூறி மரக்காணம் அடுத்த ஆலங்குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ், 31; உட்பட 25 பேரிடம் 2.63 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.



இது குறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ராமசாமி உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.இதையடுத்து, துறை சார்ந்த நடவடிக்கையாக ராமசாமியை நேற்று 'சஸ்பெண்ட்' செய்து சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X