லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.,கைது; வீட்டிலிருந்து ரூ.12 லட்சம் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
06:01

பண்ருட்டி : பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.



கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நண்டுக்குழியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் அரிகிருஷ்ணன்,49; இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்தார்.மனுவை பெற்ற வி.ஏ.ஓ.,செண்பகவள்ளி,38; ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் அரிகிருஷ்ணன் புகார் செய்தார். அவர்கள் ஒரு கவரில் 8,000 ரூபாயை வைத்து அரிகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.



அதன்படி காட்டுக்கூடலுார் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,செண்பகவள்ளியை நேற்று காலை சந்தித்து பணத்தை அரிகிருஷ்ணன் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜாமெல்வின்சிங் தலைமையில்வி.ஏ.ஓ.,வை கைதுசெய்தனர். அவரை கடலுார் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.



பணம் பறிமுதல்:இதையடுத்து பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி அங்கு இருந்த ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.இது குறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
18-செப்-202120:39:15 IST Report Abuse
spr அரசு ஊழியராக இருந்தால் ஆணென்ன பெண்ணென்ன ஊழல் செய்வது இயல்பே சிக்கிக் கொள்ளும் வரை இவர் அரசாங்க வேலை பார்க்கலாம் சிக்கிக் கொண்டு தண்டனையும் பெற்றால் அரசியல்வியாதியாக மாறி பெண்ணுரிமை பேசி தேர்தலுக்கு கூட நிற்கலாம் தாய்க்குலம் என்று இவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவே பொருளாதார வெற்றிக்காக இவர் முயற்சிக்கிறார் போலும்
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
18-செப்-202118:20:50 IST Report Abuse
Prakash எத்தனை வருடங்களாக சொந்த வூருக்கு டிரான்ஸபெர் கேட்டு லோலோ அலைந்தேன். எவனும் கொடுக்க வில்லை. இப்போ பாருங்க உடனே அது கிடைத்து விடும். அதாங்க அரசு வூழியருக்கு கிடைக்கும் மிக கடுமையான தண்டனை.
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
18-செப்-202118:11:46 IST Report Abuse
Prakash பெண் வூழியர் பெண் அதிகாரிகள் அனைவரும் உத்தமர்கள் என்ற தவறான மாயை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிமை கொடுத்தால் ஆண்களை விட மிக கேவலமான தொழில் செய்வார்கள். சமீபத்தில் வாரிசு சான்று வேண்டி டி என் ஈசேவை மூலம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் மூன்று மாதம் பிறகு நிராகரிக்கப் பட்டது. நான் மீண்டும் விண்ணப்பம் செய்ய முயற்சித்த போது தான் தெரிந்தது . எனது குடிமக்கள் பதிவு என்னை ஹாக் செய்து எனது ஆதார் எண்ணில் ஆள் மாறாட்டம் செய்து புதிய குடிமக்கள் என் பதிவு செய்து எனது வாரிசு சான்று எனது எதிர் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தாலுகா அலுவலக வூழியர்கள் உதவியின்றி நடக்க வாய்ப்பு இல்லை. இது பற்றி நான் அலுவலரிடம் கேட்ட போது தற்சமயம் அனைத்தும் ஓன்லைனில் நடப்பதால் இது போல் நடப்பதை தடுக்க முடியாது என்று சாதாரணமாக சொன்னார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X