விழுப்புரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜினாமா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜினாமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
06:06

விழுப்புரம் : விழுப்புரத்தில் போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.



விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில், அரசு சிறப்பு வழக்கறிஞராக கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் பணியாற்றினார்.கடந்த 2019 அக்., 9ம் தேதி முதல் இப்பதவியை வகித்து வந்தார். இவர், தனது சொந்த பணி மற்றும் விருப்பத்தின் காரணமாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, கலெக்டர் மோகனிடம் வழங்கினார்.ராஜினாமா கடித நகலை அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் மற்றும் சிறப்பு நீதிபதி அனுப்பியுள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X