செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, கலெக்டர் ராகுல்நாத், நேற்று வெளியிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த தொகுதிகளுக்கான வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியலை, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் நேற்று வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.தேர்தல் பிரிவு தாசில்தார் ராஜேஷ், துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் பங்கேற்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை.