தேர்தல் அறிவிப்பால் வரி வசூல் குவிகிறது! போட்டியிடுவோர் பணம் கட்ட தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
06:21

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், 5,000 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், வேட்பாளர்களாக போட்டியிட உள்ள நபர்கள், அந்தந்த ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள சொத்து, குடிநீர் போன்ற வரி இனங்களை செலுத்தி வருகின்றனர். இதனால், ஊராட்சிகளில் வரி வசூல் குவிந்து வருகிறது.



தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுடன் சேர்த்து, ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிப்பு நாளில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.தேர்தல் பணிகள், இரு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், ஒன்றிய அலுவலகங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



இன்று வேட்புமனு துவங்க உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.இது ஒருபுறமிருக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அந்தந்த ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த துவங்கியுள்ளனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய எந்த பதவிக்கு போட்டியிட்டாலும், அவர்கள் வசிக்கும் ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை போன்ற வரிகளை பாக்கி வைத்திருக்க கூடாது.



வேட்புமனு தாக்கல் இன்றே துவங்குவதால், அந்தந்த ஊராட்சிகளில், தேர்தலில் போட்டியிடும் நபர்கள், நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த துவங்கியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,321 பதவிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 2,679 பதவிகளுக்கும் என, 5,000 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 5,000 இடங்களுக்கு, 7,000 பேருக்கு மேலாக, போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுபோல் ஆயிரக்கணக்கான நபர்கள், தேர்தலில் போட்டியிடும் சூழலில், அவர்களின் வரி பாக்கி முழுதும் வசூலாவதால், ஊராட்சிகளின் வருமானம் கூடுகிறது.ஒட்டுமொத்தமாக, மாவட்ட அளவில், நிலுவையில் உள்ள வரி இனங்களை தேர்தல் முடிந்த பிறகு கணக்கிட்டால், லட்சக்கணக்கான ரூபாய் வசூலாகி இருக்கும்.சில வேட்பாளர்கள், தங்களை முன்மொழிவோருக்கும் எந்த வரி பாக்கி இருக்கலாமா அல்லது இருக்க கூடாதா என சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.



மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடும் நபர்களின் வேட்பாளர் பெயர், கட்சி தலைமை அறிவித்த பின், பாக்கி வைத்துள்ள வரியை செலுத்தலாம் என காத்திருக்கின்றனர்.நிலுவையில் உள்ள வரிகளை உடனடியாக செலுத்துங்கள் என அதிகாரிகள் பலமுறை கூறியும் கட்டப்படாத நிலுவை வரி இனங்கள், தேர்தல் நேரத்தில் தாமாக வருவதாக, உள்ளாட்சி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேர்தலால் வசூல் வழக்கமாக சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை 70 சதவீதம் வசூலாகிவிடும்.



மீதமுள்ள 30 சதவீதத்தை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். உள்ளாட்சி தேர்தல் வருவதால், வரி பாக்கி வைத்துள்ள நபர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுவதால், அவர்களும் பாக்கியை செலுத்த துவங்கியுள்ளனர்.நடப்பாண்டிற்கும் வரி செலுத்தி, ரசீது கேட்டு வருகின்றனர். நேற்றைக்கு கூட, நான்கு பேர் போன் செய்து, வரி கட்டியதற்கான ரசீது கேட்டு வருகின்றனர். பாக்கி உள்ள வரி இனங்கள், தேர்தலால் ஓரளவு வசூலாகி வருகிறது.ஊராட்சி செயலர் ஒருவர்காஞ்சிபுரம் ஒன்றியம்



- -நமது நிருபர் --

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X