ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
06:59

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் மட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதியான பரங்கிமலை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளிலும், அடுத்த மாதம், 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.



நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக, சென்னை புறநகரை ஒட்டி அமைந்துள்ள குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பகுதிகள் சென்னையை ஒட்டி அமைந்துள்ளதுடன், அந்த பகுதிகளில், பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், மிகவும் முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிறது. இதில், அய்யப்பன்தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் லத்துார், காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.



பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சென்னையை ஒட்டி அமைந்துள்ள, திரிசூலம், முடிச்சூர், வேங்கைவாசல், பொழிச்சலுார், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.



இதையடுத்து, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் தலைமையில் நேற்று, தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த ஒன்றியத்தில் 15 ஊராட்சி தலைவர்கள், 150 வார்டு உறுப்பினர்கள், மூன்று மாவட்ட கவுன்சிலர்கள், 11 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.



தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின், அறிமுகமும் நடந்தது. அதில், வேட்பு மனு தாக்கல் துவங்கி, துணை தலைவரை தேர்ந்தெடுப்பது வரை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து, விரிவாக எடுத்துஉரைக்கப்பட்டது.இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டன.



அதேபோல், கவுன்சிலர்களுக்கான கூட்ட அரங்கில், ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்து, புதுப்பிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகள் புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.சுயேச்சைகளுக்கு ஆதரவு! தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, 1996 முதல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், அரசியல் கட்சிகளை சாராத சுயேச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.



ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில், முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அல்லது கூட்டமைப்பு தேர்ந்தெடுக்கும் பொது மக்களில் ஒருவரை, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், வார்டு குழு உறுப்பினர் பதவிகளுக்கு நிறுத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கட்சிகள் தீவிரம்கட்சிகளை வலுப்படுத்துவதில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முக்கிய பங்காற்றும் என்பதால், வேட்பாளர்களை களம் இறக்குவதில், முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கிளைச் செயலர், ஒன்றிய செயலர் போன்ற அடிப்படை பொறுப்புகளில் உள்ளவர்களே கட்சிகளின் ஆணிவேராக கருதப்படுவதால், மக்களோடு மக்களாக பழகி, அவர்களின் ஓட்டுகளை கவரும் நபர்களை களமிறக்க, பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன.



- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X