இலங்கை செல்வதற்கு விண்ணப்பித்தவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
இலங்கை செல்வதற்கு விண்ணப்பித்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:07

நுங்கம்பாக்கம் : இலங்கை செல்வதற்கு விண்ணப்பித்தவரை, போலீசார் கைது செய்தனர்.



இலங்கையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் நவநீதம், 34. இவர், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள, எப்.ஆர்.ஆர்.ஓ., எனும் வெளிநாட்டு பிராந்திய பதிவு அதிகாரி அலுவலகத்தில், இலங்கை செல்வதற்காக உரிய ஆவணங்கள் இன்றி விண்ணப்பித்து உள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வெளிநாட்டு பிராந்திய பதிவு உதவி அதிகாரி, நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின் அடிப்படையில், நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் நவநீதன், இலங்கையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X