அதிகாரிகளை சந்திக்க 'ஆன்லைன்' வசதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:14

சென்னை : கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளை சந்திக்க 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி, நில வகைபாடு மாற்றம், மனைப்பிரிவு அனுமதி, பணி நிறைவு சான்று உள்ளிட்ட பணிகளுக்காக, பொது மக்கள் வருகின்றனர்.இவ்வாறு நேரடியாக பொதுமக்கள் சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு வருவதை பயன்படுத்தி, தரகர்கள் ஏராளமானோர் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், விண்ணப்பதாரர்கள் என்ற பெயரில் வருவோரிடம் நேரடியாக பேசும் சில அதிகாரிகள், கோப்புகளை நகர்த்த லஞ்ச வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.இந்நிலையில், சி.எம்.டி.ஏ., வளாகத்தில் வெளியார் வருகையை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.



இருப்பினும், பொது மக்கள் என்ற பெயரில் வெளியார் வருகை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், புதிதாக வந்துள்ள உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பொது மக்கள் வருகையை நிறுத்த, அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.கட்டட அனுமதி விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, பொது மக்கள் அதிகாரிகளை ஆன்லைன் முறையில் சந்திக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதன்படி, பொது மக்கள், 044 2841 4855 நீட்சி, 475 என்ற தொலைபேசி எண் அல்லது onlinequeries.cmda@gmail.com என்ற, இ - மெயில் வாயிலாக அதிகாரிகளிடம் நேரம் பெறலாம்.அந்த குறிப்பிட்ட நேரத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் அதிகாரிகளை சந்தித்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான விபரங்களை பெறலாம். திட்ட அனுமதி தொடர்பாக அதிகாரிகள் கேட்கும் விளக்கங்களை அளிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.இதனால் பொதுமக்கள் நேரில் வருவது முற்றிலும் தவிர்க்கப்படும். எந்த நேரத்தில், எந்த அதிகாரி யாரை சந்தித்தார் என்பது பதிவாகும். இதற்காக, அனைத்து அதிகாரிகளுக்கும் 'வெப் கேமரா' உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X