பட்டா ரத்து நடவடிக்கை இழுத்தடிப்பு; வருவாய் துறை மீது மாநகராட்சி அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:15

வேளச்சேரி : வேளச்சேரியில், ஆக்கிரமிப்பு இடங்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காததால், இடத்தை மீட்க முடியவில்லை என, வருவாய் துறை மீது மாநகராட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.



அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டி, புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி., செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதி, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாசில்தார் அலுவலக எல்லையில் உள்ளது. இங்கு, அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன.குறிப்பாக, ஓ.எஸ்.ஆர்., இடம் மற்றும் தாலுகா இடத்தை மாற்றி ஆக்கிரமித்து, பட்டா வாங்கியது என, 3 ஏக்கர் பரப்பு கொண்ட 10க்கும் மேற்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.



இதில் சில இடங்களுக்கு, பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதை, மாநகராட்சியில் காட்டி, கட்டடம் கட்ட அனுமதி வாங்கி உள்ளனர். இதற்கு, சில அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை காரணமாக, சில ஆக்கிரமிப்பு இடங்களை மாநகராட்சி மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கு, வருவாய் துறை வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி கடிதம் அனுப்பியும், வருவாய் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.



உயர் அதிகாரிகள் தலையிட்டு, அரசு இடத்தை மீட்க வேண்டும் என, வேளச்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கடிதம் எழுதியும் பலனில்லைசிலர், ஓ.எஸ்.ஆர்., இடத்தை, 20 ஆண்டுக்கு முன்பே, போலி ஆவணங்கள் வழியாக, பலர் பெயரில் பதிவு செய்து, கைமாற்றி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதேபோல், அரசுக்கு சொந்தமான, சோழிங்கநல்லுார் தாலுகா இடத்தை, வேளச்சேரி தாலுகா இடமாக மோசடி செய்தும் பட்டா வாங்கி உள்ளனர். பட்டாவை ரத்து செய்ய, வருவாய் துறை, கோட்டாட்சியர், கலெக்டர் என, பலமுறை கடிதம் எழுதிவிட்டோம்.



நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, அரசு இடத்தை மீட்க உதவ வேண்டும்.மாநகராட்சி அதிகாரிகள்அரசியல்வாதிகள் தலையீடுசிலர், ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக, நீதிமன்றத்தை நாடி உள்ளனர். ஆனால், பட்டா ரத்து செய்யக் கூடாது என, தடை உத்தரவு எதுவும் இல்லை. சமீபத்தில், அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக, பட்டா ரத்து செய்ய முடியவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவில், தற்போது நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளோம். விரைவில், ஆக்கிரமிப்பு பட்டாக்கள் ரத்து செய்யப்படும்.வருவாய்துறை அதிகாரிகள்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X