பல்லாவரம் - குன்றத்துார் சாலையில் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:25

பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், ஆபத்தான நிலையில் குறுக்கும், நெடுக்குமாக தொங்கும் மின் வடங்கள் மற்றும் நடுவில் உள்ள மின் கம்பங்களால், விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.அதிக போக்குவரத்துபல்லாவரம் - குன்றத்துார் சாலை, அதிக போக்குவரத்து கொண்டது. இதையொட்டி, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், கரைமா நகர், குன்றத்துார் ஆகிய பகுதிகள் உள்ளன.



இப்பகுதிகள் சில ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.இதன் காரணமாக, சாலையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், எந்த நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது. கொத்து கொத்தாகமுக்கியமான சாலையில், மின் வடங்கள் முறையாக இல்லை. ஆட்டுதொட்டி மைதானத்தில் துவங்கி, அனகாபுத்துார் வரை, சாலையில் குறுக்கும், நெடுக்குமாக மின் வடங்கள் செல்கின்றன.



அதுவும் ஒரு கம்பத்தில் இருந்து, ஏகப்பட்ட வடங்கள் கொத்து கொத்தாக செல்கின்றன; சில இடங்களில் தாழ்வாக உள்ளன.மற்றொரு புறம், ஆங்காங்கே, மின் கம்பங்கள் சேதமடைந்தும், கீழே விழும் நிலையிலும் உள்ளன.சங்கர் நகர் காவல் உதவி மையம் எதிரே, சாலையின் நடுவில் மின் கம்பம் உள்ளது. அந்த கம்பத்தில் இருந்து, ஏகப்பட்ட வடங்கள் அங்கும் இங்கும் செல்கின்றன.



இதனால், அதிக போக்குவரத்து கொண்ட, பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.மின் வடம் அறுந்து விழுந்தாலோ, மின் கம்பம் சாய்ந்தாலோ பெரும் விபத்து ஏற்படும்.எனவே, மின் வடங்கள் தொங்குவதை தடுக்க, மின் வடங்களை பூமிக்கு அடியில் பதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பூமிக்கு அடியில்இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரம் மின்வாரிய கோட்டத்தில், முதல் பகுதியாக, சில இடங்களில் பூமிக்கு அடியில் மின் வடம் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணி முடிந்தவுடன், இரண்டாம் கட்டமாக, எஞ்சியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் வடங்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்படும்.



அப்போது, பல்லாவரம் - குன்றத்துார் சாலையும் அதில் இணையும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர். தாம்பரத்திலும் அவலம்தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட, புத்துார் மப்பேடு பகுதிக்கு உட்பட்ட, பெருமாள்புரம் பகுதி - 2, முருகன் என்களேவ், கவினா கார்டன் ஆகிய பகுதிகளில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.



இப்பகுதியில், பெரும்பாலான இடங்களில், மின் கம்பங்கள் சாய்வாகவும், மின் வடங்கள் தாழ்வான நிலையிலும் செல்கின்றன. வீடுகளை ஒட்டிச் செல்லும் மின் வடங்களால், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.அடிக்கடி ஏற்படும் உயர் மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னைகளால், பகுதியில் தினமும் இரவு நேரங்களில், இரண்டு முதல் மூன்று மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. மின் வாரிய அதிகாரிகள், இதற்கு, உரிய தீர்வு காண வேண்டும்.



- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X