சென்னை : 'முதல்வர் காப்பீடு மையத்தில், பொதுமக்கள், இடைத்தரகர்களை அணுக வேண்டாம்' என, சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்து உள்ளார்.
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் மையம் செயல்படுகிறது.இங்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவதால், கூட்ட நெரிசலை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளிக்காக வட்டங்கள் வரையப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மையத்தில் தினமும், 70 முதல் 90 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அன்றைய தினமே, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. 'இங்கு வரும் பொதுமக்கள், இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்தார்.