மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:41

அவிநாசி:தற்காலிக மின் இணைப்புக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிபவர் தில்ஷத் பேகம், 37. திருப்பூர், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுரி, 45 என்பவர், வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தர்.இதற்காக, 2,000 ரூபாய் தில்ஷத் பேகம் லஞ்சம் கேட்டார். இது குறித்து கவுரி, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார், நேற்று மாலை அவிநாசி மங்கலம் ரோடு மின்வாரிய அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது கவுரி, உதவி பொறியாளர் தில்ஷத் பேகத்திடம் பணம் கொடுத்தபோது, போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X