'கிக்'குக்காக திருடிய தொழிலதிபர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:44

ராமநாதபுரம்:நடிகர் சூரி இல்ல விழாவில் திருடி கைதான நகைக்கடை உரிமையாளர் கிக்குக்காகவும், விளம்பரத்திற்காகவும் திருடுபவர் என போலீசார் கூறினர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இரண்டு நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ், 29; பட்டதாரி.சமீபத்தில் மதுரையில் நடந்த நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் நகை திருடப்பட்டவழக்கில், விக்னேஷை மதுரை போலீசார், கைது செய்தனர்.



போலீசார் கூறியதாவது: இரண்டு நகைக் கடைகளுக்கு சொந்தக்காரரான விக்னேஷ் விளம்பர பிரியர். மதுரை, சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்களுடன் நெருங்கி பழகி, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தில்லாலங்கடி திரைப்படத்தில், ஜெயம் ரவி பாணியில் திருடுவதில், 'கிக்' தேடியுள்ளார்.சில மாதங்களுக்கு முன், மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் விக்னேஷ் பங்கேற்றார். அதிகாரி மகள் அணிந்திருந்த வைர நெக்லசை திருடினார். இதை கவனித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இதுபோல், இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவற்றை ஒரு பொருட்டாக கொள்ளாமல், புல்லட்டில் பரமக்குடியில் வலம் வருவார்.வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுது போக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது, விசாரணை நடத்திய போலீசாரை வியப்படைய செய்துள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X