கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது | சேலம் செய்திகள் | Dinamalar
கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
22:17

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே புத்தூரை சேர்ந்த சிவராஜ் மகன் தமிழரசன், 27. இவரின் உறவினர் குமார், 30, என்பவரின் மொபைல் போன் காணவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு, சிவராஜ் போன் செய்து குமாரின் போன் மாயமானது குறித்து விசாரித்ததோடு, உன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், தன் நண்பர்கள் இளங்கோ, 25, தமிழ், 30, ஆகியோருடன் சிவராஜ் வீட்டுக்கு சென்று, கொலை மிரட்டல் விடுத்து சிவராஜ், தமிழரசன் ஆகியோரை தாக்கி உள்ளனர். காயமடைந்த தந்தை, மகன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, ஸ்ரீதர், இளங்கோ, தமிழ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X