அரசு கல்லூரியில் சேர நாளை கலந்தாய்வு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
அரசு கல்லூரியில் சேர நாளை கலந்தாய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
22:24

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில், இணையவழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியருக்கு, நேரடி சேர்க்கை கலந்தாய்வு நாளை(16ல்) நடக்கிறது. பி.ஏ., ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள் தங்களின் அசல் மாற்றுச்சான்றிதழ் 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண், அசல் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், மாணவர்களின் புகைப்படம் ஐந்து, ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X