தர்மபுரி மாவட்டத்தில் 14 இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
தர்மபுரி மாவட்டத்தில் 14 இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
22:25

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 14 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர், பஞ்., தலைவர், 12 பஞ்., வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் தேதியை தமிழக அரசு அறிவித்தது. இன்று துவங்கும் வேட்புமனு தாக்கலுக்கு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தயாராக உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்திலுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி கோட்டை விட்டது. சட்டசபை தேர்தலுக்கு பின் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அனைத்து பதவியிடங்களையும் கைப்பற்ற, தி.மு.க.,வினர் ஆளும் கட்சி என்ற முனைப்போடு களத்தில் இறங்கி வெற்றி பெறும் முனைப்போடு செயலாற்றி வருகின்றனர். தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க, அ.தி.மு.க., தயாராக உள்ள போதும், தங்களது கூட்டணியில் உள்ள, பா.ம.க., சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,விடம் நெருங்கி செல்வதால் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் முழு வெற்றி பெற முடியுமா என, அ.தி.மு.க.,வினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X