கோவில் நிலங்களுக்கு பட்டா? அமைச்சர் சேகர்பாபு மறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
22:34

திருச்சி: ''மன்னர்களும், ஜமீன்தார்களும் கோவில்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்துக்கு பட்டா கொடுப்பது சாத்தியமற்றது. கோவில் நிலங்களுக்கு பட்டா கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.



திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில், தினமும் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டா லின் நாளை துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, நேற்று அமைச்சர் சேகர்பாபு திருச்சி வந்தார். அவருடன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு உடன் சென்றார்.


திருவானைக்காவல், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் ஆய்வு செய்த பின், சேகர்பாபு கூறியதாவது: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கோவில்களில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர்களை, நிரந்தரமாக்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. துறை ரீதியாக அனைத்து தகவல்களும் திரட்டி, தகுதியானவர்கள் நிரந்தர பணி நியமனம் செய்யப்படுவர். அரசு பணிக்கான வயது வரம்பு 35 தான். புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 180 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அறநிலையத் துறை ஆணையர் தான், ஆக்கிரமிப்பாளர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, இறை பக்தி உள்ள யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மன்னர் காலத்தில் ஜமீன்தார்கள் கோவில்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்துக்கு பட்டா கொடுப்பது சாத்தியமற்றது. மயிலாடுதுறை போன்ற இடங்களில் பட்டா கொடுத்தது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவில் நிலங்களுக்கு பட்டா கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X