எச்சரிக்கை!  சென்னையில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:46

சென்னை-சென்னையில், கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 226 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.



பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், மூன்றாவது அலையை தடுக்க முடியாது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, வார்டுக்கு ஒரு குழு என, மொத்தம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சியுடன், காவல் துறையும் கைகோர்த்துள்ளது.



சென்னையில், கொரோனா தொற்றை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும், 50 சதவீதத்தினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை 100 சதவீதமாக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.இதற்கிடையே, சென்னையில் தொற்று பரவல் எண்ணிக்கை, தொடர்ந்து இரண்டாவது நாளாக, 200ஐ கடந்துள்ளது. குறிப்பாக, ஒரே குடும்பத்தில், மூன்று முதல் ஐந்து பேர் வரை பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தொற்று தடுப்புதொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலோனர், மார்க்கெட் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் வாயிலாக பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.அப்படி இருந்தும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், தி.நகர், காசிமேடு மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும், பொதுமக்கள் கூடுவது அதிகரித்து வருகிறது.இதேநிலை தொடர்ந்தால், சென்னையில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர், மாநகராட்சி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.ஆலோசனை கூட்டத்திற்குப் பின், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், காவல்துறை, மாநகராட்சி இணைந்து பணியாற்ற உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இதுவரை, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது, வார்டுக்கு ஒரு குழு என, மொத்தம் 200குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



திடீர் ஆய்வுஒவ்வொரு குழுவிலும், மாநகராட்சியை சேர்ந்த, ஐந்து பேர், காவல்துறையை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைதவிர்த்து, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், வணிகவளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபடுவர். மேலும், மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகை கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் இருந்து, சென்னை முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 400 கேமராக்களின் வாயிலாக பொதுமக்கள் அதிகளவு கூடியுள்ள இடங்கள் கண்காணிக்கப்படும். அதன் வாயிலாக, முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது போன்ற தகவல்கள், அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களிடையே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சின் களப்பணியாளர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்க உள்ளனர்.



ஆலோசனை



மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பெரிய அளவிலான முககவசம் மாதிரிகள் அமைக்கப்படும். எல்.இ.டி., திரை வாகனத்தில், விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் ஒலிபெருக்கி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த பகுதிகளிலும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற, மாவட்ட நிர்வாகங்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



முக்கிய மண்டலங்களில் அதிகரிப்புசென்னை மாநகராட்சிக்குட்பட்ட, கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல், சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X