புதிய மெட்ரோ ரயில் பணிமனைகள் ஒப்பந்ததாரர் நியமிக்கும் பணி துரிதம் | சென்னை செய்திகள் | Dinamalar
புதிய மெட்ரோ ரயில் பணிமனைகள் ஒப்பந்ததாரர் நியமிக்கும் பணி துரிதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:49

மாதவரம், பூந்தமல்லி பை - பாஸ் மெட்ரோ பணிமனைகள் கட்டுமான பணிக்கு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில் மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில், முதல் கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதையில், மாதவரம் - சி.எம்.பி.டி., வரை 16.34 கி.மீ., மாதவரம் - சிறுசேரி சிப்காட் மெட்ரோ பாதையில் தரமணி இணைப்பு சாலை வரை, 35.67 கி.மீ., என இரு வழியிலும், மொத்தம் 52.01 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை, 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த இரண்டு பாதைகள் மற்றும் நிலையங்கள் கட்டுமான பணிகளுக்கு பல பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இரண்டு பாதைகளிலும் சில இடங்களில் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இத்துடன், பூந்தமல்லி பை - பாஸ் - கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ பாதைக்கும், ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இப்பாதைகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பராமரிக்க, முதல் கட்டமாக, மாதவரம் மற்றும் பூந்தமல்லி பை - பாஸ் மெட்ரோ நிலையங்களில், பராமரிப்பு பணிமனைகளும், அடுத்த கட்டமாக, சிறுசேரி சிப்காட் மெட்ரோ பணிமனை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.மாதவரம் மெட்ரோ பணிமனையில் 37 பாதைகள் நிறுவப்பட உள்ளன. பூந்தமல்லி பை - பாஸ் மெட்ரோ பணிமனையில், 24 பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிமனைகள் கட்ட ஒப்பந்த நடவடிக்கைகளை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரயில் பெட்டி மறு சீரமைப்பு!சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து, 2015ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். இந்த வகையில் 2015ல் இருந்து இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகளை, மறு சீரமைக்கும் பணி, கோயம்பேடில் உள்ள மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிமனையில் நடந்து வருகிறது. மறுசீரமைக்கும் திட்டத்தில் முதல் ரயிலுக்கான நான்கு பெட்டிகள், 1.77 கோடி ரூபாய் செலவில், 40 நாட்களில் சீரமைப்பு பணி முடிந்துள்ளது. பல கட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு, மீண்டும் ரயில் பயணியர் போக்குவரத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் நேற்று ஆய்வு செய்தார்.


- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X