'பயோ காஸ்' தயாரிப்பு மைய கட்டுமானம் விரைந்து துவக்க கமிஷனர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:50

பள்ளிக்கரணை,--பள்ளிக்கரணை குப்பை கிடங்கில், 100 டன் திறன் கொண்ட, 'பயோ காஸ்' எனப்படும் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையத்திற்கான கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 5,100 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவை, மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மீதமுள்ளவை பெருங்குடி, கொடுங்கையூரில் கொட்டப்படுகின்றன. அங்கு நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பையை அகற்றி, நிலத்தினை மீட்டெடுக்கவும், உர மையங்களை வலுப்படுத்தி, திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும், முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து, பெருங்குடி மண்டலத்தில் உள்ள பெருங்குடி, பள்ளிக்கரணை குப்பை கிடங்குகளை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.பெருங்குடியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றி, 'பயோ மைனிங்' முறையில் நிலத்தை மீட்டெடுக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அந்த திட்டத்தின் கீழ், கட்டுமானம் மற்றும் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை விரைந்து முடித்து, குப்பையை அகழ்ந்தெடுக்கும் முறையை விரைவில் துவங்க உத்தரவிட்டார்.பின், கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 400 டன் திறன் கொண்ட ஆலை, தோட்டக்கழிவு, தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்யும் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் 40,850 கன மீட்டர் திடக்கழிவுகளை,'பயோ மைனிங்' முறையில் அகழ்ந்தெடுத்து மீட்கப்பட்ட நிலப்பகுதியை பார்வையிட்டார். 100 டன் திறன் கொண்ட உயிரி எரிவாயு தயாரிக்கும் மையத்திற்கான கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்க உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X