32 பெண்களிடம் ரூ.1.50 கோடி மோசடி நைஜீரிய 'சிங்கிள்ஸ்' இருவருக்கு 'காப்பு!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:53

சென்னை-வரன் தேடி வந்த, தமிழகத்தைச் சேர்ந்த 32 பெண்களிடம், டாக்டர்கள் போல நடித்து, 1.50 கோடி ரூபாய் மோசடி செய்தது, நைஜீரிய வாலிபர்களிடம் விசாரித்ததில் அம்பலமானது.ஆப்ரிக்க நாடான நைஜீரி யாவைச் சேர்ந்தவர்கள் பாலினஸ் சிகேலுவோ, 31, சிலிட்டஸ் இகேசுக்வு, 23. மாணவர்கள் போல டில்லி உத்தம் நகரில் தங்கி இருந்தனர். இவர்கள், சமூக வலைதளமான 'பேஸ்புக், டுவிட்டர்' வாயிலாக பெண்களுடன் பழகி வந்தனர்.மேலும், திருமண தகவல் இணையதளத்தில் மணப்பெண் தேடுவது போல இணைந்துள்ளனர். அந்த இணையதளம் வாயிலாக, வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும் என, வரன் தேடும் பெண்களை குறிவைத்து, அவர்களுடன் நட்பாக பழகி வந்தனர்.'வாட்ஸ் ஆப்'பில் பல மணி நேரம் 'சாட்டிங்' செய்து, நெதர்லாந்து டாக்டர் எனக்கூறி அந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தனர்.தங்களிடம் சிக்கிய பெண்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறி வந்தனர். பின், அந்த பரிசுப் பொருளை அனுப்ப பதிவு கட்டணம், சுங்க வரி செலுத்த வேண்டும் என நம்ப வைத்து, வங்கி கணக்கு வாயிலாக கோடிக்கணக்கில் சுருட்டி வந்தனர்.இவர்களிடம், 7 லட்சம் ரூபாய் வரை இழந்த, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, டில்லியில் பதுங்கி இருந்த பாலினஸ் சிகேலுவோ மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு ஆகியோரை ஆக., 31ல் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, சென்னை உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 32 பெண்களிடம், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இவர்களில், திருமண வயதை கடந்தவர்களே அதிகம் என போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X