பாதாள சாக்கடை திட்டத்தில் தொய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
06:34

சிவகங்கை : சிவகங்கையில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் ‛மேன்ஹோல்'களை உயர்த்தி கட்டும் பணி கிடப்பில் உள்ளதால் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.



இந்நகரில் 27 வார்டுகளில் வீடு, வர்த்தக நிறுவனம் மூலம் தினமும் கழிவுநீர் சேகரமாகிறது. இந்த கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்ய 12 ஆண்டுக்கு முன் (தி.மு.க., ஆட்சியில்) பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய கீழக்குளம் ரோட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளிலும் இணைப்பு கொடுத்து கழிவுநீரை கடத்தி செல்ல 3000 க்கும் மேற்பட்ட இடங்களில் ‛மேன்ேஹால்' அமைக்கப்பட்டது.



அதற்கு பின் ரோடு பணி நடந்ததால் அந்த மேன்ேஹால்கள் அனைத்து மூடப்பட்டு விட்டது.நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூடப்பட்ட மேன்ேஹல்களை தேடி அவற்றை உயர்த்தி கட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பொது நிதியில் ரூ.50 லட்சம் ஒதுக்கினார்.டெண்டர் எடுத்தவர்கள் முறையாக பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.



சில இடங்களில் மேன் ேஹால் இருக்கும் இடம் பள்ளமாக இருப்பதால் மரக்கிளைகளை போட்டு மூடி வைத்துள்ளனர். இரவில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்கும் பணிக்காக ஆங்காங்கே ரோடுகள் உடைக்கப்பட்டு இணைப்பு கொடுக்கப்படுகிறது.



தோண்டப்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல் ஊழியர்கள் சென்று விடுவதால் பெரும்பாலான ரோட்டில் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி கூறியதாவது: தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். உரிய விசாரணை செய்து பாதாள சாக்கடை பணிகள் விரைவுபடுத்தப்படும்,என்றார்.===

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X