ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2021
06:38

சிவகங்கை : சிவகங்கையில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.



தேவகோட்டை வட்டார செயலர் சாமுவேல் தலைமை வகித்தார்.சிவகங்கை வட்டார தலைவர் அய்யாச்சி, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகசுந்தரம், துணை தலைவர்கள் சரோஜா தேவி, சசிக்குமார், ஜான்பிரிட்டோ, துணை செயலாளர்கள் அழகுதேவி, பழனியப்பன், முருகேசபாண்டியன், மாவட்ட பொதுக்குழு மரியசெல்வி, நடராஜன், கோவிந்தராஜன், ஜீவானந்தம் தேர்வாகினர். மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன், நிர்வாகிகள் கோடீஸ்வரன், பெரியசாமி பாராட்டினர். பழைய பென்ஷன் திட்டம் வேண்டும். இடைநிலை ஆசிரியரின் சம்பள முரண்பாடு களைதல், உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வு வேண்டி தீர்மானம் நிறைவேற்றினர். வட்டார பொருளாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X