பெரிய ஊராட்சி, ஒன்றியங்களை பிரித்தால்... நிர்வாகம் எளிதாகும்! 10 ஆண்டுகளாக அரசுக்கு தொடர் அழுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
06:45

பொள்ளாச்சி :பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், அதிக கிராமங்களைக்கொண்ட பெரிய ஊராட்சிகளை பிரித்து, புதிய ஊராட்சிகள் உருவாக்கவும், அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்களை பிரித்து, புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள்; தெற்கு ஒன்றியத்தில், 26 ஊராட்சிகள்; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன.



இந்த ஒன்றியங்களில், கடந்த, 10 ஆண்டுகளில் மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்து, புதிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டதால் தற்போதைய சூழலில், குறைந்த அளவிலான மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளைக் கொண்டு ஊராட்சிகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், சுகாதாரம், குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு முறையாக வழங்க முடியாமலும், குறைந்த நிதியில் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த முடியாத சூழலும் நிலவுகிறது.பிரிக்கணும்இதனால், அதிக கிராமங்களை கொண்ட ஊராட்சிகளை பிரித்து, புதிய ஊராட்சி உருவாக்கவும், அதிக ஊராட்சிகளைக்கொண்ட ஒன்றியங்களை பிரித்து, புதிய ஒன்றியங்கள் உருவாக்கவும், மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ராமபட்டிணம் ஊராட்சியில், 7,429 பேர்; சேர்வைகாரன்பாளையத்தில், 4,528 பேர்; தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜமீன்கோட்டாம்பட்டியில், 9,606 பேர் உள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், சொக்கனுார் ஊராட்சியில், 6,020 பேர், ஆனைமலை ஒன்றியத்தில், திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,990 பேர்; கம்பாலபட்டியில், 5,380 பேர் மற்றும் அங்கலக்குறிச்சியில், 8,816 பேர் உள்ளனர்.இந்த ஊராட்சிகள் அனைத்தும் குறைந்தபட்சம் ஐந்து கிராமங்களையும், அதிகபட்சமாக, ஒன்பது கிராமங்களை கொண்டுள்ளன. மேலும், சில ஊராட்சிகளில் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்களும் உள்ளன.தீர்மானம்இந்த ஊராட்சிகள் அனைத்தையும் பிரிக்க வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தை பிரித்து, புதிய ஒன்றியம் உருவாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.



புதிய ஊராட்சி, ஒன்றியம் உருவாக்கப்பட்டால், நிர்வாகம் சீராகி மக்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படும். அதிக நிதி கிடைப்பதுடன், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய ஊராட்சிகள் உருவாக்கணும்!தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின், மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலுள்ள, வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள, பெரிய ஊராட்சிகளை பிரிக்கவும், ஒன்றியங்கள் உருவாக்கவும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.



தமிழகம் முழுவதிலும், 12,525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஒன்றியங்கள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புதிதாக கிராம ஊராட்சிகள் உருவாக்கவில்லை. அதேசமயம், பல புதிய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உருவாக்கப்படும் போதும், தரம் உயர்த்தப்படும் போதும், கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் அதனுடன் இணைக்கப்படுகிறது. இதனால், ஊராட்சிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய ஊராட்சிகள், ஒன்றியங்கள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, நிர்வாக பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும். இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X