நம்மை தாங்கும் பூமியை காக்கணும்! ஓசோன் தினத்தில் விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
06:55

ஆனைமலை : 'வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் பயன்பாட்டை குறைத்து, ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டும்,' என, பள்ளியில் நடந்த ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.



கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில், தேசிய பசுமைப்படை மாணவர்கள் சார்பில், ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் பூவிழி தலைமை வகித்தார். அறிவியல் பாட ஆசிரியர்கள் கஜேந்திரன், சோபனா மற்றும் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர்கள் பேசியதாவது:சர்வதேச அளவில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும், செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது.சூரியனில் இருந்து வரும் கதிர்களை, ஓசோன் படலம் தடுப்பதால், உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவது இல்லை.



நமது செயல்களால் நாளுக்குநாள் ஓசோன் படலம் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கும் போது வெளியாகும் வாயு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால், ஓசோன் படலம் பாதிப்புக்கு உள்ளாகிறது.நம்மை தாங்கி வாழவைக்கும் பூமியை காக்க, நாம் அதிக அளவில் மரங்கள் நடவு செய்ய வேண்டும். இருக்கின்ற மரங்களை காக்க வேண்டும். வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் பயன்பாட்டை குறைத்து, அனைவரின் எதிர்காலத்துக்காக ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டும். டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X