தந்தையை வெட்டி கொன்ற மனநலம் பாதித்த மகன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
23:45

விருத்தாசலம்:மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர், தன் தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 65; விவசாயி; இவரது மனைவி அம்சவல்லி. மகன் அறிவுச்சுடர், 35; மகள் சுமதி, 30.மகன் அறிவுச்சுடர்



10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், வயலில் உள்ள கொட்டகையில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அவரது குடும்பத்தினர் தினசரி உணவு வழங்கினர். வயலில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளதால், மகாலிங்கம் இரவு நேரத்தில் வயலுக்கு காவலுக்கு சென்று வந்தார்.



வழக்கமாக அதிகாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வருபவர் நேற்று காலை 7:00 மணி ஆகியும் வரவில்லை.வயலுக்கு சென்று பார்த்தபோது, கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மகாலிங்கம் இறந்து கிடந்தார். விருத்தாசலம் போலீசார் விசாரித்தனர்.மகன் அறிவுச்சுடர் வழக்கமாக துாங்கும் கட்டிலில், சில தினங்களாக மகாலிங்கம் துாங்கியுள்ளார். அறிவுச்சுடர் கீழே துாங்கும் நிலை ஏற்பட்டது. அறிவுச்சுடர் பொருட்களை யார் எடுத்தாலும் தாக்குவது வழக்கம்.



தன் கட்டிலை தந்தை அபகரித்த ஆத்திரத்தில், கட்டியிருந்த சங்கிலியை அறுத்து வந்து, மகாலிங்கம் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக வெட்டியது தெரிந்தது. தந்தையை கொலை செய்தது கூட தெரியாமல் அறிவுச்சுடர் வயலில் சுற்றித் திரிந்தார். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவரை பிடித்து சங்கிலியால் கட்டி வைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X