ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த படிகள் சேதம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த படிகள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2021
23:47

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிகள் சேதமடைந்து கிடப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.



ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மத்திய, மாநில அரசு பல கோடி ரூபாய் செலவில் அக்னி தீர்த்த கடற்கரையை அழகுபடுத்துதல், உடை மாற்றும் அறை, நடைமேடை, பூங்கா அமைத்தது.இரு ஆண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் சிமென்ட் சிலாப்பில் படிகள் அமைத்தது. கடல் அலையை தடுக்கும் வகையில் அமைத்த இந்த படிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், சில மாதத்திற்கு முன் வீசிய ராட்சத அலையில் படிகள் உடைந்து, அக்னி கடற்கரை கரடுமுரடான பாதையாக மாறி கிடக்கிறது.பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதிபட்டும், பலர் காயம் அடைகின்றனர்.எனவே உடைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப் கற்களை அகற்றி இயற்கையான மணல் பரப்பில் சென்று பக்தர்கள் நீராட கலெக்டர் சந்திரகலா நடவடிக்கை எடுக்க வேண்டும்.----

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X