உள்ளட்சி இடைத்தேர்தல்: ஒருவர் மட்டும் மனு தாக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:27

திருப்பூர்:ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலும், மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் அதிகாரிகள் துவக்கிவிட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில், 147 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலுக்கு, 106 சாவடிகளில் ஓட்டளிக்க வேண்டும். தாராபுரம் ஒன்றிய வார்டுக்கு, 10 ஓட்டுச்சாவடிகளிலும், மூன்று ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு, 17 சாவடிகளிலும், வார்டு உறுப்பினர்களுக்கு, 14 சாவடிகளிலும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டில், வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி அடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ஊராட்சியின், 1வது வார்டு உறுப்பினருக்கும் தேர்தல் நடக்கிறது.532 வாக்காளருக்கு2 ஓட்டுமொத்தம், 11 ஒன்றியங்களில், ஒவ்வொரு பகுதியில் தேர்தல் நடக்கிறது; வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியின், 1வது வார்டில், மாவட்ட கவுன்சிலர், வார்டு உறுப்பினர் என, இரண்டு ஓட்டு பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது, 1வது வார்டு ஓட்டுச்சாவடியில் வரும், 532 வாக்காளர் மட்டும், இத்தேர்தலில் இரண்டு ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்; மற்ற, 146 சாவடிகளில் உள்ள வாக்காளர் ஒரு ஓட்டு மட்டும் பதிவு செய்ய இருக்கின்றனர்.ஒருவர் மனுத்தாக்கல்மனுத்தாக்கல் துவங்கி, இரண்டாவது நாளாக நேற்று, 19 இடங்களில், ஒருவர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம்புதுார் ஊராட்சியின், 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, (பொது - பெண்) ஒருவர் மட்டும் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தடுப்பூசி கட்டாயம்தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, தேர்தல் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மட்டுமல்லாது, வேட்பாளர்களும், கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் பட்டியல் தயாரிப்பு பணி வேகமெடுத்துள்ளது.பட்டியலில் உள்ளவர்களில், தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து, சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட, சுகாதாரத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், விடுபட்ட வேட்பாளருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X