ஹிந்து அமைப்பு நிர்வாகி மீது தாக்குதல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஹிந்து அமைப்பு நிர்வாகி மீது தாக்குதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:39

திருப்பூர்;ஹிந்து முன்னேற்ற கழகத்தின், திருப்பூர் மாவட்ட தலைவராக உள்ளவர் ஸ்ரீகாந்த், 44; திருப்பூர் அணைப்பாளையத்தில், பனியன் பிரின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர், அணைப்பாளையம் பாலம் அருகே, அரிவாள் வெட்டு காயத்துடன் கிடப்பதாக, நேற்று இரவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. வடக்கு போலீசார் விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீகாந்தை மீட்டனர். கை, கால், உடலில் சில இடங்களில் அரிவாள் வெட்டு காயத்துடன், ஆபத்தான நிலையில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.போலீசார் கூறுகையில், '' ஆறு பேர் கொண்ட கும்பல், பனியன் பிரின்டிங் நிறுவனத்துக்குள் சென்று, சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அவரை கொண்டு வந்து பாலம் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர். அவர் கூச்சலிட்டதால், மர்ம நபர்கள் வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர். முன் விரோதம் காரணமாக நடந்ததா, என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X