சீசனுக்கு ஏற்ப திருட்டு யுக்திகளை மாற்றும் 'டிரென்டிங்' திருடர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
01:27

ராமநாதபுரம்:சீசனுக்கு ஏற்ப திருட்டு யுக்திகளை மாற்றும் 'டிரென்டிங்' திருடர்களிடம் மக்கள் பணத்தை இழப்பது அதிகரித்து வருகிறது.



பொதுவாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், வாடிக்கையாளரின் டெபிட் கார்டு காலாவதியாகிவிட்டதால் ஏ.டி.எம்., கார்டின் பத்து இலக்க எண்ணை தெரிவிக்க சொல்லி பணத்தை அபகரிப்பது எல்லாம் அந்த காலம் என்றாகிவிட்டது இப்போது. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.அதே போல் பரிசு விழுந்துள்ளது. அதைப் பெற பணம் அனுப்புங்கள் என்பதும் பழைய டெக்னிக்.



இப்போது 'டிரென்டிங்' ஆன விஷயங்களை பயன்படுத்தி நுாதன முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் பெருகிவிட்டது.அரசு தற்போது, கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள நகைக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி எப்படி மக்களை ஏமாற்றலாம், என யோசிக்க தொடங்கிவிட்டனர்.



அதன் விளைவுதான் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்ப வந்த பெண்ணிடம் மோசடி ஆசாமி கைவரிசை காட்டி 1.19 லட்சம் ரூபாயை அபகரித்து சென்றார். அவர் அந்த பெண்ணிடம், நகைக்கடன் தள்ளுபடி ஆகிவிட்டது. பணத்தை கட்டிய பின் நகையை திருப்பி கொள்ளலாம். அதே நேரம் நீங்கள் கட்டிய பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், என வங்கி மேலாளர் போல் நடித்து பணத்தை பெற்று எஸ்கேப் ஆனார்.



இதே போல் மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த வாலிபரின் அலைபேசியில் பேசிய நபர் தான் நீட்' தேர்வு எழுத செல்வதாகவும், எனது அலைபேசி எண்ணுக்கு பதில் தவறுதலாக உங்கள் அலைபேசி எண்ணை கொடுத்துவிட்டேன். உங்கள் அலைபேசிக்கு ஒரு ஓ.டி.பி., எண் வந்துள்ளது. அதை கொஞ்சம் சொல்லுங்கள். தேர்வுக்கு பணம் கட்டிவிட்டேன் சார். தேர்வு எழுத வேண்டும், என்றால் ஓ.டி.பி., அனுப்பி உறுதி செய்ய வேண்டும். எனது வாழ்க்கையே உங்கள் கையில் தான் உள்ளது, என்று பதட்டத்துடன் கூறியுள்ளார்.



இதனை நம்பிய அந்த வாலிபர் ஓ.டி.பி., எண்ணை சொல்லவும், அடுத்த பத்து நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1200 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசிற்கு தெரிவித்துள்ளார். விசாரணை நடக்கிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X