நெல்லையில் தினமும் கொலைகள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு 8 கிராமங்களில் 2 ஆயிரம் போலீஸ் குவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
01:36

திருநெல்வேலி:நெல்லை, தென்காசியில் நேற்றும் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.



திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே வடுவூர்பட்டியில் செப்.,13 இரவு சங்கரசுப்பிரமணியன் 37, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்த கும்பல், 2013ல் கொலை செய்யப்பட்ட கொத்தன்குளம் மந்திரம் என்பவரின் சமாதியில் வீசிச்சென்றனர். மந்திரம் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த கொலையில்கொத்தன்குளம் மந்திரத்தின் மகன் மகராஜா 20, சீயான்பாண்டியன் 31, பாறையடி பப்பி 24, பிரபாகரன் 26, அரவிந்த், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக செப்.,15 காலை கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன் 37, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்த கும்பல், முன்தினம் கொலை நடந்த வடுவூர்பட்டி சம்பவ இடத்தில் வீசிச்சென்றனர். இந்த கொலை தொடர்பாக மேலச்செவல் சிவா 23, மொட்டைசிவா 24, பேச்சிமுத்து 20, ஐயப்பன் 20, மாடசாமி 25, சுரேஷ் என்ற நந்தா 24, மகேஷ்ராஜா 24 ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.



இரு சமூகங்களுக்கு இடையே நிலவும் ஜாதி மோதலால் முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பிரான்சேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் போலீசார் நேற்று இரு தரப்புகிராமங்களிலும் அமைதி கூட்டங்களை நடத்தி அமைதிக்கு வரும்படி பெண்களிடம் வலியுறுத்தினர். அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி., அன்பு ஆய்வு செய்தார்.




மேலும் 3 பேர் கொலை:திருநெல்வேலியில் ஜாதிமோதல் கொலைகளை தொடர்ந்து தனிப்பட்ட முன்பகையில் நேற்று முன்தினம் 3 கொலைகள் நடந்தன.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பைனான்ஸ் தொழில் செய்துவந்த மார்ட்டின் 2020 ஜூனில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் கைதான மக்துாம் என்பவரின் மகன் அப்துல்காதர் 27, சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்து திருநெல்வேலி சாந்திநகரில் தங்கியிருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு ஜான்ஸ் கல்லுாரி வளாகம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.



நேற்று அவரது உடல் பரிசோதனைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் கொண்டுசெல்லப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இசக்கி என்பவரின் மகன் தங்கபாண்டி 25,யை அதே ஊரை சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம் இரவு வெட்டிக்கொலை செய்தனர். அம்பாசமுத்திரம் போலீசார் விசாரித்தனர்.



தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் அருகே ராமநாதபுரம், கூடலுாரை சேர்ந்த மாணிக்கம் மகன் விஜயகணேஷ் 21, பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்றுவந்தார். நேற்று அதிகாலை அங்குள்ள மொட்டமலையில் மார்பில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. வாசுதேவநல்லுார் போலீசார் விசாரித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X