இயந்திரம் திருடிய மூன்று பேர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இயந்திரம் திருடிய மூன்று பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
01:49

வடவள்ளி:கணுவாயில், கம்பெனியின் பூட்டை உடைத்து, இயந்திரத்தை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.கணுவாய், டீச்சர்ஸ் காலனியில் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு மேனேஜராக பணிபுரியும் ரவி செட்டி, 50, நேற்று காலை கம்பெனியின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கம்பெனியின் முன்புறம் உள்ள கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது.இதனால் சந்தேகம் அடைந்து, நண்பர்களுடன், உள்ளே சென்று பார்த்தபோது, கம்பெனியில் இருந்த இயந்திரத்தை, மூவர் வண்டியில் ஏற்றி, திருடி செல்ல முயன்றது தெரியவந்தது. மூவரையும் பிடித்து, வடவள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், மூவரும் வடவள்ளியை சேர்ந்த காளிமுத்து, 41, ஞானசேகர், 36, இடையர்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன், 24 என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X