பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாள் விழா:நூறு வார்டுகளில் தொண்டர்கள் கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
02:02

கோவை:பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட நுாறு வார்டுகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி, 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது. மாநில பொது செயலாளர் செல்வகுமார், மாநகர தலைவர் நந்தகுமார் பங்கேற்கின்றனர்.காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் காலை 11:00 மணிக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், 12,000 இளம்பெண்களுக்கு மாதந்தோறும், இலவச சானிடரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, இதம் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கிறார்.ஆர்.எஸ்.புரம் மண்டல் சார்பில் பகல் 1:00 மணிக்கு, சுந்தரம் வீதியில் சிறப்பு அன்னதானமும், உக்கடம் மண்டல் சார்பில் மேற்கு உக்கடத்தில், மாலை 5:00 மணிக்கு 200 பெண்களுக்கு சேலையும் வழங்கப்படுகிறது.செல்வபுரத்தில் நடைபெறும் விழாவில், 71 மாணவர்களுக்கு கல்விச்செலவிற்கு தலா ஆயிரம் ரூபாயும், 71 மகளிருக்கு சில்வர் குடமும், 71 பெண்களுக்கு சேலையும், 71 ஆண்களுக்கு வேட்டியும் வழங்கப்படுகிறது.மதியம் 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தெலுங்குபாளையம் பிரிவிலுள்ள பெட்ரோல் பங்க்கில், பொதுமக்களில் 71 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மண்டல் தலைவர் குமார் வழங்குகிறார்.மாநில இளைஞரணி பொதுசெயலாளர் பிரீத்திலட்சுமி தலைமையில், கவுண்டம்பாளையம் அசோக்நகரிலுள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், மோடி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு, அலகு குத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் பழையூரில் கொடியேற்று விழா மற்றும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி,மண்டல் தலைவர் மயில்வாகனன் தலைமையில் நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X