கல்லுாரி மாணவி மாயம் | செய்திகள் | Dinamalar
கல்லுாரி மாணவி மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
04:19

புதுச்சேரி-மளிகை கடைக்கு சென்ற கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், கற்பக விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய சவுமியா, 19; பெண்கள் தொழில்நுட்ப கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் இருந்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்ற சத்திய சவுமியா, அதன் பின் வீடு திரும்பவில்லை.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X