ஆயிகுளத்தில் சுகாதார சீர்கேடுமுத்திரையர்பாளையம் ஆயி குளத்தை சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்தும், புதர்மண்டியும் சுகாதார சீர்கேடாக உள்ளது.சந்திரா, முத்திரையர்பாளையம்கால்நடைகளால் விபத்து அபாயம்நாவற்குளம் அன்னை நகரில் வீதியில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. அன்பரசன், நாவற்குளம்கொசுமருந்து தெளிக்கப்படுமாபுதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வ.உ.சி., வீதியில் கொசு தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.அமுதா, புதுச்சேரி குப்பையால் சுகாதார கேடுகுருவிநத்தம் - முள்ளோடை சாலையின் இருபுறமும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ராமநாதன், குருவிநத்தம்.போக்குவரத்து நெரிசல் புதுச்சேரி தென்னஞ்சாலை ரோட்டில் இருபுறமும் பல மாதமாக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆனந்தராஜ், புதுச்சேரிவேகத்தடை அமைக்கப்படுமாதட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை - கோரிமேடு சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளதுகவிதா, புதுச்சேரி சாலையில் ஆக்கிரமிப்புமதகடிப்பட்டு - சன்னியாசிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை குறுகி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.சிவபாரதி, மதகடிப்பட்டுகாலி மனைகளால் அச்சம்நைனார்மண்டபம் கிழக்கு வாசல் வீதி 4வது குறுக்கு தெருவில் காலி மனைகளில் புதர்மண்டி,விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அருகில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர்.ஜெயச்சந்திரன், நைனார்மண்டபம்.