'டுவென்டி-20' கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகியது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 செப்
2021
04:23
பதிவு செய்த நாள்
செப் 17,2021 04:22

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்குப் பின் 'டுவென்டி-20' கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோஹ்லி அறிவித்துள்ளார். பணிச்சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். உலக கோப்பை தொடருக்கு ஒருமாதம் உள்ள நிலையில் திடீரென கோஹ்லி, பதவி விலகியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கான சில காரணங்கள்:




* இந்திய ஒருநாள், 'டுவென்டி-20' அணிக்கு இரண்டு துணைக் கேப்டன்கள் நியமிக்க வேண்டும் என கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்ததால், கோஹ்லி பதவி விலகும் முடிவை எடுத்திருக்கலாம்.


* பொதுவாக பணிச்சுமை காரணமாக அதிக 'டுவென்டி-20' ல் கோஹ்லி பங்கேற்பதில்லை. இவர் கேப்டனான பின் இந்தியா பங்கேற்ற 67 'டுவென்டி-20' போட்டிகளில் 45ல் தான் விளையாடினார்.


* 2020க்குப் பின் டெஸ்டில் கோஹ்லியின் ரன் சராசரி 26.80 ஆக குறைந்து விட்டது.


* 2019க்குப் பின் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து களமிறங்கிய 53 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.


* கடந்த ஆண்டு மும்பை அணி 5வது ஐ.பி.எல்., கோப்பை வென்றது. இதனால் 'டுவென்டி-20' அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன.


* ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்காக பல ஆண்டு கேப்டனாக இருந்த போதும் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. இவர் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்பிர் சர்ச்சை கிளப்பினார்.


பறிபோகும் 'ஒருநாள்'




'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின் பதவி விலகும் கோஹ்லி, டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக தொடர உள்ளார். இருப்பினும் வரும் உலக கோப்பை தொடரில் கோஹ்லி கோப்பை வெல்லவில்லை என்றால், ஒருநாள் அணி கேப்டன் பதவியும் பறிபோகலாம்.


27




கடந்த 2017ல் தோனி விலகிய பின் கோஹ்லி, 'டுவென்டி-20' அணி கேப்டன் ஆனார். 45 போட்டிகளில் கேப்டனாக 12 அரைசதம் உட்பட 1502 ரன் எடுத்த இவர், 'டுவென்டி-20' அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் ஆனார்.


* சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிவேகமாக 1000 ரன் எடுத்த முதல் கேப்டன் கோஹ்லி.


* சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர்களில் கோஹ்லி (90 போட்டி, 3159 ரன், சராசரி 52.65) 'நம்பர்-1' ஆக நீடிக்கிறார்.



கேப்டனாக செயல்பாடு...




* 'டுவென்டி-20'ல் 45 போட்டிக்கு 27ல் வெற்றி பெற்று தந்தார் (14 தோல்வி; 2 'டை'; 2 முடிவில்லை)


* ஒருநாள் கிரிக்கெட்டில் 95 போட்டியில் கேப்டனாக இருந்து, 65ல் வெற்றி பெற்று தந்தார் (27 தோல்வி; 1 'டை'; 2 முடிவில்லை)


* டெஸ்டில் 65 போட்டிக்கு கேப்டனாக இருந்து 38ல் வெற்றி பெற்றுத் தந்தார். 11 போட்டி 'டிரா' ஆனது (16 தோல்வி).



தோனி காரணமா




மூன்று வித கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக கோஹ்லி செயல்பட்டாலும், இதுவரை ஒரு ஐ.சி.சி., கோப்பை கூட வெல்லவில்லை. இதனால் வரும் உலக கோப்பை தொடருக்கு முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் அணித் தேர்வு உட்பட பல்வேறு விஷங்களில் தலையிடலாம். கோஹ்லி பதவி விலக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202122:58:55 IST Report Abuse
Ranjit Kumar ivan utter waste
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
17-செப்-202115:52:48 IST Report Abuse
mupaco ரோஹித் ஒருநாள் போட்டிக்கு வரும் ஒருநாள் உலக கோப்பை வரை இருக்கலாம். ரிஷப பந்த் இருப்பது ஓவர் அணிக்கு பொருத்தமாக இருப்பர்.
Rate this:
Cancel
17-செப்-202108:21:11 IST Report Abuse
அப்புசாமி அண்ணன்சச்சின் போன ரூட்டில் போகப் போகிறார். கேப்டன் பதவி டென்ஷன் புடிச்ச பதவி. கண்டவனுக்கும் பதில் சொல்லணும்.யாரு கீழேயாவது விளையாட ரெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X