துாண்டில்முள் வளைவு அமைக்க கோரிக்கை | செய்திகள் | Dinamalar
துாண்டில்முள் வளைவு அமைக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
04:33

புதுச்சேரி-கடல் அரிப்பால் காலாப்பட்டில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நலச்சங்கம் கூறி உள்ளது.தமிழக பகுதியான பொம்மையார் பாளையத்தில் கடல் அரிப்பை தடுக்க, கரையோரம் கருங்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால், அருகிலுள்ள மீனவ கிராம கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரையில் அலையின் தாக்கம் கடுமையாகி வருகிறது. இதன் காரணமாக காலாப்பட்டு பகுதியில் மீன்பிடி தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.நேற்று கடலுக்கு சென்ற பெரிய காலாப்பட்டை சேர்ந்த மீனவர் காசிநாதன் என்பவரின் படகு கவிழ்ந்தது. அதில் அவர் தலையில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.கடல் அரிப்பு காரணமாக காலாப்பட்டு உள்ளிட்ட நான்கு கிராம மீனவர்கள் ஒரு வாரமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி அரசு துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X