தமுக்கம் முதல் அவுட்போஸ்ட் வரை வாகன ஓட்டிகள் தவியாய் தவிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
04:54

மதுரை : மதுரையில் நத்தம் ரோடு உயர்மட்ட பாலப் பணிகளால் ஆறு மாதங்களாக தமுக்கம் முதல் அவுட் போஸ்ட் வரை கோகலே ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவியாய் தவிக்கின்றனர். ஊர்ந்து செல்லும் வாகனங்களால் மணிக்கணக்கில் நிம்மதி இழக்கின்றனர்.ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து புதுார், நத்தம் ரோடு, மாட்டுத் தாவணி, மேலுார் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கோரிப்பாளையம், தமுக்கம், பொதுப்பணித்துறை அலுவலகம் வழியாக கோகலே ரோட்டை கடக்க வேண்டும்.ஆறு மாதங்களாக நடக்கும் மேம்பால பணிகளால் அவுட் போஸ்ட்டிற்கு முன்புள்ள விஷால் டீ மால், லீ சார்ட்லியர் பள்ளி வளைவு ரோடு மிகவும் குறுகிவிட்டது. இதனால் தமுக்கம் முதல் இப்பகுதி வரை உள்ள ஒரு கி.மீ., துாரத்தை வாகனங்கள் கடப்பதற்குள் படாதபாடு படுகின்றன.தினமும் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மருத்துவமனைகள் உள்ளதால் ஆம்புலன்ஸ் செல்வதிலும் பெரும் சவாலாக உள்ளது.மேலும் விஷால் டி மால் முன் ஒரு வாகனம் செல்லும் வகையில் ரோடு குறுகியுள்ளதால், அதற்கு முன் ரோட்டின் நடுவில் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதில் எந்த புறத்தில் செல்ல வேண்டும் என்ற வாகன ஓட்டிகளின் தடுமாற்றத்தால் அடிக்கடி வாகனங்கள் மோதிக்கொள்கின்றன. போலீஸ் வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளது.தற்காலிக மாற்று என்ன
கோவை, ஈரோட்டில் இருந்து ஆரப்பாளையம் வந்து மாட்டுத்தாவணி செல்லும் வெளியூர் செல்லும் 20 சதவீத பஸ்கள் அண்ணா பஸ் ஸ்டாண்ட் வழியாக மாட்டுத்தாவணிக்கு திருப்பி விடலாம்.மாட்டுத்தாவணி, அழகர்கோவில் ரோடு, மேலுார், கொட்டாம்பட்டி வழியாக செல்லும் 60 சதவீதம் வாகனங்கள் தமுக்கம் நேரு சிலையில் இருந்து வலது புறமாக திருப்பி, காந்தி மியூசியம், மாநகராட்சி நீச்சல் குளம், ராஜா முத்தையா மன்றம், மாவட்ட நீதிமன்றம் வழியாக திருப்பி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வழி செல்ல அனுமதிக்கலாம்.இதுதவிர நத்தம், சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம் வழியாக செல்லும் பஸ்களை மட்டும் கோகலே ரோட்டில் அனுமதித்தால் வாகன நெரிசல் வெகுவாக குறையும். மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
19-செப்-202116:06:03 IST Report Abuse
T.B.Sathiyanarayananan The only urgent move is to take immediate steps to finish the Bridge. Two years before more than 200 to 300 persons are working the full day, but now a days very peoples are working. The Government officials are the reason for that. More than two Ministers are there now in that area.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
17-செப்-202112:02:35 IST Report Abuse
veeramani கோவில் நகரம் மதுரை, தெருக்கள் எல்லாம் குருகலான்து. ஒரே தீர்வு பொது போக்குவரத்து தான். மாசு ஏற்படுவதை குறைக்க, டிராம் சேவை அறிமுகப்படுத்தலாம்.(மேலூர் முதல் ஏர்போர்ட் வரை ஒன்றும், கீழடி முதல் பல்கலைக்கழகம் வரையும், விரகனுர் முதல் சோழவந்தான் வரையிலும்) நான்கு பாதைகள் உருவாக்கினால் நிச்சயமாக சிக்கலை நிவர்திபண்ண இயலும். (ட்ரம் சேர்விஸ்யை தனியாருக்கு கொடுக்கலாம்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X