உணவுகளை இலவசமாக வழங்கவும் உரிமம் அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
05:07

உணவு பாதுகாப்புத்துறையின் நோக்கம், பணிநுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 2006ல் தரங்கள் ,2011ல் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் படி விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உணவு பாதுகாப்பு விதிகளை மீறுவோரை கண்டறிய ஆய்வு நடத்துகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கிறோம். விதிகளை கடைபிடிப்பதற்கும் வார்னிங் அளிக்கிறோம்.



உணவு வழங்க உரிமம் பெற வேண்டமா



உணவு உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள், விடுதிகள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள், குடிநீர் வாகனங்கள், பள்ளி கேன்டீன்கள், அன்னதானம் வழங்கும் வழிபாட்டு தலங்கள் என இலவசமாக, விற்பனைக்கோ உணவு பொருட்களை வழங்க, அனைவரும் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உணவு பொருட்கள் கொண்டுசெல்லும் நிறுவனங்கள் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட நியமன அலுவலரிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புக்கு உரிமம் இல்லாமல் இருந்தாலோ ,புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.



உணவு பாக்கெட்களில் தகவல் இல்லையேல் நடவடிக்கை



உணவின் பெயர், தயாரிப்பாளர் முகவரி, உட்பொருட்கள், சத்துக்கள் விபரம், சைவ, அசைவ குறியீடு, பேட்ச் எண், தயாரித்த, பேக் செய்த தேதி, எடை, காலாவதி தேதி போன்ற விபரங்கள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அச்சிடப்படாமல் இருந்தாலோ, அழிக்கப்பட்டு இருந்தாலோ அது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இத்தகைய தகவல்கள் அச்சிடப்படாமல் இருந்தால் அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனம், கடைக்கு சீல் வைக்கப்படும்.



பாட்டில் குடிநீரின் தரத்தை எவ்வாறு அறிந்து கொள்வது



ISI, fssai எண் அச்சிட்டுள்ள அடைக்கப்பட்ட பாட்டில், கேன் குடிநீரைதான் வாங்க வேண்டும். அவ்வாறு அச்சிடப்படாத குடிநீர் பாட்டில்கள், கேன் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம். நிறுவனத்திற்கு சான்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என ஆராய ISI, fssai இணையதளங்களில் உரிம எண்ணை பதிவிட்டு சரிபார்த்து கொள்ளலாம்.



தரம் குறைவான உணவு பொருட்களை விற்றால் தண்டனை



பழைய உணவுகளை விற்பனை செய்வது, பழைய, கெட்ட இறைச்சியை விற்பது போன்றவைகள் கண்டறியப்படும் போது ,அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துவது சரிதானாதோற்ற பொலிவிற்காக உணவு பதார்த்தங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவான 100 பி.பி.எம்.,க்கு மேல் நிறமூட்டிகளை பயன்படுத்தும் போது அது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தினால் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.



உணவகங்களில் பாலிதீன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை



பார்சல்களுக்கு பாலிதீன் பயன்படுத்துவதால் ஜீரண உறுப்புகளை பாதித்து செரிமான சக்தியை குறைக்கிறது. பொதுமக்கள் முடிந்த அளவு சூடான உணவு பொருட்களை பார்சல் வாங்க செல்லும் போது பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும். உணவகங்கள், பிற கடைகளில் பாலிதீன் பைகள் வழங்குவதை கண்டால் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பாலிதீன் பைகள் பயன்படுத்தினால் உடனடியாக ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும்.



சமையல் எண்ணெய் மறுபயன்பாடு பற்றி



ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்த கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணையை ரூகோ அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒரு தொகை செலுத்தி பயோ டீசல் தயாரிக்க பயன்படுத்தி கொள்ளவார்கள்.


கலப்படம், பாதுகாப்பற்ற உணவு குறித்து புகார் அளிக்க உணவின் தரம் பற்றிய புகார்களுக்கு 94440 42322ல் அலைபேசி வாயிலாக,வாட்ஸ் ஆப், குறுந்தகவல் மூலம் தெரிவிக்கலாம். unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.ஆரோக்கியத்தை காத்து கொள்வதற்கான வழிமுறைகள்உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கொண்டுள்ள காய்கறி, பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இரும்பு சத்து, அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பையே உணவில் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஏ, டி செரிவூட்டப்பட்ட அரிசி, பால், கோதுமை மாவு, எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X